உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம் : தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், சேலம் முதன்மை கல்வி அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட முன்னாள் கவுரவ தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். அதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல்; மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை, பொது மாறுதலுக்கு முன் நடத்தல்; அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் வழங்கும் அனைத்து சலுகைகளும், உரிமைகளும் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் கிடைக்க வழி செய்தல்; ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட தலைவர் மனோகரன், பொருளாளர் ஜெயந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி