உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கைலாசநாதர் கோவிலில் களைகட்டிய தேரோட்டம்

கைலாசநாதர் கோவிலில் களைகட்டிய தேரோட்டம்

கைலாசநாதர் கோவிலில் களைகட்டிய தேரோட்டம்தாரமங்கலம்:தைப்பூசத்தையொட்டி, தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில், 3 நாள் தேரோட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் இரு தேர்களும், நிலையத்தில் இருந்து அண்ணா சிலை பகுதிக்கு கொண்டுவந்து நிறுத்தப்பட்டன. 2ம் நாளான நேற்று, கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு மேல் தேரோட்டம் தொடங்கியது. வரதராஜ பெருமாள் எழுந்தருளிய சிறு தேர், சோமாஸ்கந்தர், உமாமகேஸ்வரி எழுந்தருளிய பெரிய தேரை, ஏராளமான பக்தர்கள், 'அரோகரா' கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்து வந்தனர். பின் இரு தேர்களும், பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டன. தேரின் முன் சிறுவர்கள் சிலம்பாட்டம், இளைஞர்களின் கிராமிய ஆட்டம், பக்தர்கள் தீச்சட்டி கரகம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தாரமங்கலம் போலீசார், ஓமலுார் தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்றும் தேரோட்டம் நடக்கிறது.83ம் ஆண்டு பண்டிகைமேட்டூர் காவேரிநகர் சக்தி காளியம்மன், மாரியம்மன் கோவிலில், 83ம் ஆண்டு பண்டிகையை ஒட்டி, கடந்த, 28ல் கொடியேற்றம் நடந்தது. நேற்று முன்தினம் பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்தனர். நேற்று காலை, 6:00 மணிக்கு அக்னிகுண்டம், மாலை அக்னி கரகம், அலகு குத்துதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை, 10:00 மணிக்கு கோலப்போட்டி, மதியம், 1:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு தேரில் அம்மன் வீதிஉலா நடக்கிறது. நாளை காலை, கம்பம் ஆற்றில் சேர்த்தல், மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை