கவுண்டம்பட்டியில் தீர்த்தக்குட ஊர்வலம்
இடைப்பாடி: இடைப்பாடி, கவுண்டம்பட்டி சின்னமாரியம்மன் கோவிலில் நடைபெறும் மாசி திருவிழாவிற்காக 150க்கும் மேற்பட்ட பக்தர்கள், நேற்று கல்வடங்கத்தில் இருந்து தீர்த்தக்குடங்களை எடுத்து வந்தனர்.இடைப்பாடி, கவுண்டம்பட்டி பகுதியில் ஆண்டுதோறும் மாசி மாத சின்னமாரியம்மன் கோவில் திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு நடைபெறவுள்ள, சின்னமாரியம்மன் சுவாமி திருவிழாவிற்காக நேற்று கல்வடங்கம் காவிரி ஆற்றில் இருந்து, 150க்கும் மேற்பட்டவர்கள் ஊர் கவுண்டர் முருகையன் தலைமையில், தீர்த்தக்குடங்களை எடுத்து வந்தனர். இந்த புனிதநீர் மூலம் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று கம்பம் நட்டு பூச்சாட்டுதலுடன் இந்தாண்டுக்கான மாசித்திருவிழா தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.