உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தண்ணீர் குடிக்க உகந்ததுஆய்வில் கலெக்டர் உறுதி

தண்ணீர் குடிக்க உகந்ததுஆய்வில் கலெக்டர் உறுதி

தண்ணீர் குடிக்க உகந்ததுஆய்வில் கலெக்டர் உறுதிஏற்காடு:'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாமில், சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, ஏற்காட்டில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். 2ம் நாளான நேற்று, ஜெரீனாக்காட்டில் ஆய்வு செய்தார். புதிதாக கட்டப்படும் ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டார். தொடர்ந்து ஒன்றிய நிர்வாகம் மூலம் வீடுகளுக்கு வழங்கப்படும் தண்ணீரை சேகரித்து, அந்த இடத்திலேயே, குடிப்பதற்கு உகந்ததா, நச்சுத்தன்மை உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார். அதில் குடிப்பதற்கு உகந்தது என உறுதியானது. பின் மக்களிடம் குறைகளை கேட்டு கலந்துரையாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை