தட ஆக்கிரமிப்பு அகற்றம்பருத்தி பகுதிக்கு அவசாசம்
தட ஆக்கிரமிப்பு அகற்றம்பருத்தி பகுதிக்கு அவசாசம்தாரமங்கலம்:தாரமங்கலம், ஆரூர்பட்டி ஊராட்சி கவுண்டன்வளவில், 200 மீட்டர் தடத்தை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்தனர். இதனால் எடையப்பட்டியை சேர்ந்த வெங்கடாஜலம், 44, அதிகாரிகளிடம் மனு அளித்தார். பின் தாரமங்கலம் ஊரக வளர்ச்சி துறை மண்டல பி.டி.ஓ., யசோதா தலைமையில் தாரமங்கலம் போலீசார், ஆரூர்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் உள்ளிட்ட பணியாளர்கள் நேற்று தட ஆக்கிரமிப்பை அகற்றினர். மக்கள், நீர்வழிப்பாதை உள்ளதாக கூறியதால், அங்கு குழாய் அமைக்கப்படும் என தெரிவித்தனர். ஒரு இடத்தில் பருத்தி விளைந்திருந்ததால், அங்கு மட்டும் ஆக்கிரமிப்பை அகற்ற ஒரு மாத அவகாசம் வழங்கினர்.