மதுவால் கல்லீரல் பாதிக்கும்மருத்துவ பயிலரங்கில் தகவல்
மதுவால் கல்லீரல் பாதிக்கும்மருத்துவ பயிலரங்கில் தகவல்சேலம்:சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் உயிர் வேதியியல் துறை சார்பில் கல்லீரல் நோய் குறித்த மருத்துவ பயிலரங்கம், கண்காட்சி நேற்று நடந்தது. டீன் தேவிமீனாள் தொடங்கி வைத்தார். அதில் அரசு, தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் பேசினர்.கல்லீரல் தொடர்பான நோய்கள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள், செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தனர். மது அருந்தினால் கல்லீரல் வெகுவாக பாதிக்கப்படும். உடல் பருமன் கொண்டவர்களுக்கு கல்லீரலில் கொழுப்பு படிந்து பாதிப்பு வரும். அதேபோல் நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கும் கொழுப்பு படிந்து கல்லீரல் பாதிப்பு ஏற்படும். கர்ப்ப காலத்தில் கல்லீரல் நோய் தொற்று வர வாய்ப்புள்ளது குறித்து பேசினர். கல்லீரல் செயல்பாடுகள் குறித்த கண்காட்சியை, ஏராளமானோர் பார்வையிட்டனர். துறைத்தலைவர் ரங்கராஜன், இணை பேராசிரியர் ராஜலட்சுமி, மருத்துவ கண்காணிப்பாளர் ராஜ்குமார் உள்பட மருத்துவ மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.