உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / திருவிழாவில் பிணம் வேடமிட்டுபக்தர் நுாதன வழிபாடு

திருவிழாவில் பிணம் வேடமிட்டுபக்தர் நுாதன வழிபாடு

திருவிழாவில் பிணம் வேடமிட்டுபக்தர் நுாதன வழிபாடுசேலம்:சேலம், ஜாரி கொண்டலாம்பட்டி மாரியம்மன், காளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை ஒட்டி ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து, அலகு குத்தி, தீ மிதித்து வேண்டுதல்களை நிறைவேற்றினர். நேற்று மாறுவேடமிட்டு, வேண்டுதல் நிறைவேற்றும் நிகழ்ச்சி நடந்தது. அதில், அதே ஊரை சேர்ந்த சமையல் மாஸ்டர் பாலகிருஷ்ணன், பிணம் வேடமிட்டு, வேண்டுதலை நிறைவேற்றினார்.முன்னதாக பாடை கட்டி, அலங்கரித்த தேரில், அவரை பிணம் போல் படுக்க வைத்து ஊர்வலமாக சுடுகாடுக்கு கொண்டு சென்றனர். அங்கு கோழியை பலி கொடுத்து, வேண்டுதலை நிறைவேற்றினார். நோய் நொடியின்றி வாழவும், ஊர் நன்மைக்காகவும், பல ஆண்டுகளாக பிணம் வேடமிட்டு வழிபடும் முறை உள்ளதாக, பக்தர்கள் தெரிவித்தனர்.தேரோட்டம்இடைப்பாடி, சித்துார் படவெட்டியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி நேற்று முன்தினம் பொங்கல் வைத்து வழிபட்டனர். நேற்று தேரோட்டம் நடந்தது. ஊர் முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள், கோவிலில் இருந்து தேரை இழுத்து, சித்துார் அம்மன் கோவில் வரை சென்றனர். ஏராளமான பக்தர்கள், கோவிலில் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ