ஆஞ்சநேயர் கோவிலில்நாளை ராம நவமி விழா
ஆஞ்சநேயர் கோவிலில்நாளை ராம நவமி விழாசேலம்:சேலம், முதல் அக்ரஹாரம் ஆஞ்சநேயர் கோவிலில், ராம நவமி உற்சவ விழா, நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, அன்று அதிகாலை, 4:00 மணி முதல், பஞ்ச சுத்த ஹோமம், திருமஞ்சனம், ராமர் போல் அலங்காரம் செய்து தீபாராதனை, பிரசாதம், நீர் மோர் வழங்குதல் நடக்க உள்ளது. மாலையில் சிறப்பு தீபாராதனை, முரளிதர சுவாமிகளின் சிஷ்ய கோடிகளின் உபன்யாசம், 'ராம நாம மகிமை' தலைப்பில், நாம சங்கீர்த்தனம் நடக்க உள்ளது. இதனால் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.