மேலும் செய்திகள்
தொழிலாளி மாயம்
02-Apr-2025
அங்கன்வாடி மையம் திறப்பு
20-Mar-2025
காலி குடங்களுடன் மக்கள்சாலை மறியல் போராட்டம்தாரமங்கலம்:தாரமங்கலம் அருகே, கருக்கல்வாடி ஊராட்சியில் மந்திவளவு, சோலைநகர், கரட்டூர், நேரு நகர் பகுதிகளில், ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். அந்த பகுதியில், 45 நாட்களாக குடிநீர் முறையாக வரவில்லை.அதனால் ஆத்திரமடைந்த மக்கள், நேற்று சேலம் பிரதான சாலையில் அழகுசமுத்திரம் பஸ் ஸ்டாப் பகுதியில், காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். காலை, 11:50 முதல் 12:20 மணி வரை, 30 நிமிடம் நடந்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் நின்றன.தாரமங்கலம் பி.டி.ஓ., முருகன், தாரமங்கலம் போலீசார் மக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் அவர்கள் கலைந்து சென்றனர்.
02-Apr-2025
20-Mar-2025