உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சீராக குடிநீர் வழங்காததால்பெண்கள் சாலை மறியல்

சீராக குடிநீர் வழங்காததால்பெண்கள் சாலை மறியல்

சீராக குடிநீர் வழங்காததால்பெண்கள் சாலை மறியல்மகுடஞ்சாவடி:மகுடஞ்சாவடி ஊராட்சி, 5, 6வது வார்டுக்கு உட்பட்ட குப்பாண்டிபாளையம், மரகதம் நகர், மேட்டுக்காடு, அம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்கு இரு மாதங்களாக காவிரி குடிநீர் மட்டுமின்றி ஆழ்துளை குழாய் தண்ணீரும் சீராக வழங்கப்படவில்லை. இதுகுறித்து மக்கள், ஊராட்சி மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் புகாரளித்தும் பலனில்லை.இதனால் நேற்று காலை, 11:00 மணிக்கு, மகுடஞ்சாவடி - இடைப்பாடி பிராதான சாலையில் காலி குடங்களுடன் ஏராளமான பெண்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.மகுடஞ்சாவடி போலீசார், பி.டி.ஓ., சின்னுசாமி பேச்சு நடத்தி உடனே நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனால் பெண்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ