உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு பள்ளியில் ஒரே நாளில் 21 மாணவர் சேர்க்கை

அரசு பள்ளியில் ஒரே நாளில் 21 மாணவர் சேர்க்கை

அரசு பள்ளியில் ஒரே நாளில் 21 மாணவர் சேர்க்கைகெங்கவல்லி:மூலப்புதுார் அரசு நடுநிலைப்பள்ளியில், மாணவர் சேர்க்கை விழாவில், ஒரே நாளில், 21 பேர் சேர்க்கப்பட்டனர்.கெங்கவல்லி அருகே, மூலப்புதுார் கிராமத்தில், அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், வரும் கல்வியாண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கை விழா நடந்தது. கெங்கவல்லி வட்டார கல்வி அலுவலர் ஸ்ரீனிவாஸ் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் யுவராணி முன்னிலை வகித்தனர். மூலப்புதுார் பகுதிகளில் இருந்து, முதலாம் வகுப்பிற்கு, 19 குழந்தைகளும், மற்ற வகுப்புக்கு இருவர் என மொத்தம், 21 பேர் ஒரே நாளில் சேர்க்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி