உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மருத்துவ மாணவி கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மருத்துவ மாணவி கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலம்: கோல்கட்டா மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து, சேலம் கோட்டை மைதா-னத்தில் இடதுசாரிகள் கூட்டியக்கம் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்-பாட்டம் நேற்று நடந்தது. மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூ., கட்சி செல்வகுமார் தலைமை வகித்தார்.அதில் மாணவி கொலை விவகாரத்தில் உண்மை குற்றவாளியை கைது செய்தல்; குற்றவாளிகளை, 10 நாளில் விசாரித்து கடும் தண்-டனை வழங்குதல்; சமூக குற்றங்களுக்கு அடிப்படை காரணமான டாஸ்மாக் கடை, ஆபாச வலைதளங்களை உடனே தடை செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். கூட்டியக்க நிர்வாகிகள் சரவணன், சீனிவாசன் உள்பட பலர் பங்-கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை