ஓமலுார் டோல்கேட்டில் மாத கட்டண உயர்வு அமல்
ஓமலுார்: சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே கருப்பூரில், சேலம் - பெங்க-ளூரு தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. அங்கு தினமும், 25,000 முதல், 30,000 வாகனங்கள் கடந்து செல்கின்றன. அந்த சுங்கச்சாவடியில் நேற்று முதல், வாகன உபயோகிப்பாளர் மாத கட்டணம் சற்று உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி கார், பயணியர் வேன், ஜீப்புக்கு ஒருவழி பயணம், 95 ரூபாய், ஒரே நாளில் பலமுறை இயக்க, 145 ரூபாயாக அப்படியே உள்ளது. அதற்குரிய மாத கட்டணம் மட்டும், 2,910 ரூபாயாக இருந்தது, 2,915 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.அதேபோல் இலகு ரக வர்த்தக வாகனத்துக்கு(எல்.சி.வி.,) ஒரு வழிப்பயணம், 170 ரூபாய், ஒரே நாளில் பலமுறை பயணிக்க, 255 ரூபாய் கட்டணம் அப்படியே உள்ளது. அதன் மாத கட்டணம் மட்டும், 5,090 ரூபாயாக இருந்தது, 5,105 ரூபாயாக உயர்த்தப்பட்-டுள்ளது. பஸ், டிரக் வாகனங்கள் ஒருமுறை பயணிக்க, 340 ரூபாய், ஒரே நாளில் பலமுறை பயணிக்க, 510 ரூபாய் கட்டணம். இதன் மாத கட்டணம், 10,180 ரூபாயாக உள்ள நிலையில் தற்-போது, 10,205 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பல அச்சு வாக-னங்கள் ஒருமுறை சுங்கச்சாவடியை கடக்க, 545 ரூபாய், ஒரே நாளில் பலமுறை கடக்க, 820 ரூபாய் கட்டணம். இதன் மாத கட்-டணம், 16,360 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது, 16,405 ரூபாயாக உயர்ந்துள்ளது.இதுகுறித்து சுங்கச்சாவடி மேலாளர் சீனிவாசன் கூறுகையில், ''புது கட்டண உயர்வில் மாத கட்டணம் மட்டும் குறைந்த அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளூர் வாகனங்கள் கடக்க வழக்கம்போல், 15 ரூபாய், உள்ளூர் வர்த்தக பயன்பாடில்லா வாக-னத்துக்கு, சுங்கச்சாவடியில் இருந்து, 10 கி.மீ.,க்குள் வசிப்போ-ருக்கு மாத பாஸ் கட்டணம், 150 ரூபாய், 10 முதல், 20 கி.மீ.,க்குள் வசிப்போருக்கு மாத கட்டணம், 300 ரூபாய்(பாஸ்டேக்) மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.