உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போலீஸ் பாதுகாப்புடன் பொங்கல் வைத்து வழிபாடு

போலீஸ் பாதுகாப்புடன் பொங்கல் வைத்து வழிபாடு

ஆத்துார்: கெங்கவல்லி அருகே நடுவலுாரில் கைலாச-நாதர், அருங்காட்டம்மன், பெரிய அம்மன், சின்ன அம்மன், காங்குடையான், பெரியசாமி உள்ளிட்ட கோவில்கள் உள்ளன. அங்கு, 21 ஆண்டுகளுக்கு பின், கடந்த, 19ல் தேர் திருவிழா தொடங்கியது. கடந்த, 24ல் அருங்காட்டம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. 25ல் ஒருதரப்பினர், காங்கு-டையான் கோவில் திருவிழாவுக்கு பாதுகாப்பு கேட்டு, ஆத்துார் டி.எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர்.இதையடுத்து நேற்று காங்குடையான் கோவிலில் பொங்கல் வைத்தல், கிடா வெட்-டுதல் விழா நடந்தது. இதில் பொங்கல் வைத்து, 300 கிடா, 700க்கும் மேற்பட்ட கோழி-களை பலியிட்டு வழிபட்டனர். இதையொட்டி ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில், 90 போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.ஏற்காடு மாரியம்மன்ஏற்காடு, ஜெரீனாக்காடு பெரிய மாரியம்மன் கோவிலில் கடந்த ஜூன், 12ல் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 48ம் நாளான நேற்று சங்கு பூஜை, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. மதியம் அலங்காரம் செய்யப்பட்ட அம்மனின் சிலையை பக்தர்கள் ஒன்று கூடி தோளில் துாக்கியபடி கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் ஊர்வலம் வந்தனர். பின் விளக்குகளால் அலங்-கரிக்கப்பட்ட தேரில் அம்மனை வைத்து, ஏற்-காடு பஸ் ஸ்டாண்ட் வழியே லாங்கில்-பேட்டை, முருகன் நகர், எம்.ஜி.ஆர்., நகர் கிரா-மங்களுக்குள் ஊர்வலமாக எடுத்துச்சென்று, மீண்டும் இரவு, 8:25க்கு கோவிலை அடைந்-தனர். ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி