மேலும் செய்திகள்
அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கல்
03-Sep-2024
பனமரத்துப்பட்டி: வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பனமரத்துப்பட்டி, ஏற்-காடு, சேலம் ஆகிய ஒன்றியங்களில் நடக்கும் வளர்ச்சி திட்டப்ப-ணிகள் குறித்த ஆய்வு கூட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றிய அலு-வலகத்தில் நேற்று நடந்தது. சேலம் கூடுதல் கலெக்டர் லலித்ஆ-தித்ய நீலம் தலைமை வகித்தார்.அதில் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சங்கமித்திரை, உதவி திட்ட அலுவலர் குணாளன் உள்ளிட்டோர், 2022 - 23 முதல், 2024 -25ம் ஆண்டுகளில் ஒப்புதல் அளிக்கப்பட்ட வளர்ச்சி திட்டப்பணிகளின் தற்போதைய நிலை குறித்து கேட்-டனர். குறிப்பாக தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தொழி-லாளர்களுக்கு அதிக நாட்கள் பணி வழங்குதல், கலைஞர் கனவு இல்லம், ஊரக குடியிருப்பு பராமரித்தல் போன்ற பணிகளை வேகப்படுத்த ஆலோசனை வழங்கினர். உதவி செயற்பொறி-யாளர் ஜெகதீஸ்வரன், பனமரத்துப்பட்டி கமிஷனர் கார்த்தி-கேயன், பி.டி.ஓ.,க்கள், ஒன்றிய பொறியாளர்கள், மண்டல துணை பி.டி.ஓ.,க்கள் பங்கேற்றனர்.வாலிபரை கத்தியால் குத்திய 'குடி'மகன் கைதுசங்ககிரி: இடைப்பாடி, தங்காயூரை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் ராஜ்-குமார், 36. இவர் நேற்று, சங்ககிரி, ஐவேலியில் உள்ள அவரது நண்பர் மீன் கடையில் பணியில் ஈடுபட்டார். அப்போது கடை அருகே, 'போதை'யில் நின்றிருந்தவர், சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற தனியார் பஸ்சை மறித்தார். ராஜ்குமார், அவரை, சாலையோரம் அழைத்து வந்தார். இதில் கோபமடைந்த குடி-மகன், ராஜ்குமாரை கத்தியால் குத்தினார். படுகாயமடைந்த அவர், மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்-கப்பட்டுள்ளார்.சங்ககிரி போலீசார் விசாரணையில் குடிபோதையில் தகராறு செய்-தவர், கேரள மாநிலத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன், 42, என தெரிந்-தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
03-Sep-2024