மாநகராட்சியில் இன்று குடிநீர் கட்
சேலம்: சேலம் மாநகராட்சி பகுதியில், இன்று ஒரு நாள் குடிநீர் வினி-யோகம் நிறுத்தப்படுகிறது.சேலம் மாநகராட்சி கமிஷனர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மாநகராட்சியின் தனிக்குடிநீர் திட்டம் செயல்படும் தொட்டில்பட்டியில், இயங்கி வரும் மோட்-டார்களில் பராமரிப்பு பணிகள் இன்று (பிப்.,25) நடைபெற உள்-ளது. எனவே, இன்று ஒருநாள் மட்டும், மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும். பொதுமக்கள் குடிநீரை சிக்க-னமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்-ளது.