மேலும் செய்திகள்
குடிநீர் தொட்டி கட்ட பூமிபூஜை
21-Dec-2024
ஆத்துார், ஜன. 4-ஆத்துார் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், முல்லைவாடியில் ரேஷன் கடை கட்ட, 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி பணி நடந்தது. அந்த கடையை நேற்று, ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் திறந்து வைத்தார். அ.தி.மு.க., நகர செயலர் மோகன், இலக்கிய அணி மாநில துணை செயலர் காளிமுத்து, கவுன்சிலர் வரதராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.பூமி பூஜை விழாதென்னங்குடிபாளையத்தில், தேசிய ஊரக வேலை திட்டத்தில் ரேஷன் கடை கட்ட, 13.60 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. ஆத்துார் ஒன்றிய குழு தலைவி பத்மினிபிரியதர்ஷினி தலைமை வகித்து பணியை தொடங்கிவைத்தார். மாவட்ட கவுன்சிலர் நல்லம்மாள், ஒன்றிய கவுன்சிலர் சேகர், ஊராட்சி தலைவர் பிச்சமணி உள்பட பலர் பங்கேற்றனர்.
21-Dec-2024