பாம்பு தீண்டிசிறுவன் அட்மிட்
பாம்பு தீண்டிசிறுவன் 'அட்மிட்'ஓமலுார்,:ஓமலுார் அருகே முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்த, விவசாயி ரமேஷ், 37. இவரது மகன் கவுதமன், 13. முத்துநாயக்கன்பட்டி அரசு பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கிறார். நேற்று காலை, 10:00 மணிக்கு வீடு அருகே கவுதமன் விளையாடிக்கொண்டிருந்தபோது பாம்பு தீண்டியது.சிறுவனை மீட்ட பெற்றோர், உடனே ஓமலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு முதலுதவி அளித்த பின், மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.