தே.மு.தி.க., கொடியேற்று விழா
தே.மு.தி.க., கொடியேற்று விழாசேலம்:தே.மு.தி.க., கொடி அறிமுகம் செய்து, 25ம் ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு, வெள்ளி விழா ஆண்டாக கட்சியினர் கொண்டாடுகின்றனர். அதன்படி சேலம், கிச்சிப்பாளையத்தில் நேற்று நடந்த கொடியேற்று விழாவில், கொள்கை பரப்பு செயலர் மோகன்ராஜ், மாநகர் மாவட்ட செயலர் ராதாகிருஷ்ணன், கட்சி கொடியேற்றி, இனிப்பு வழங்கினர்.அதேபோல் அயோத்தியாப்பட்டணம், அ.நா.மங்கலத்தில், தெற்கு ஒன்றிய செயலர் வெங்கடேசன் தலைமையில் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. ஊராட்சி நிர்வாகி வினோத் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.