முதல்வர் பிறந்தநாள்அமைச்சர் அறிவுரை
முதல்வர் பிறந்தநாள்அமைச்சர் அறிவுரைசேலம்:சேலம், புது பஸ் ஸ்டாண்ட் அருகே தி.மு.க., அலுவலகத்தில், மத்திய மாவட்ட பொது உறுப்பினர் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் சுபாசு தலைமை வகித்தார்.மாவட்ட செயலர், அமைச்சர் ராஜேந்திரன் பேசுகையில், ''முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கி கொண்டாட வேண்டும். அனைத்து பகுதிகளிலும் முதல்வர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும். மாணவ, மாணவியர், ஆண்கள், மகளிர் என எல்லா தரப்பினருக்கும் தனித்தனியே பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசளிக்க வேண்டும்,''என்றார்.மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், மாநகர் அவைத்தலைவர் முருகன், மாநகர் செயலர் ரகுபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலர் தரணிதரன் உள்பட பலர் பங்கேற்றனர்.