மேலும் செய்திகள்
பைக் மோதிசாலையோரம் நின்றவியாபாரி பலி
18-Jan-2025
கிணற்றில் புதுப்பெண்சடலம் மீட்புநங்கவள்ளி:நங்கவள்ளியை சேர்ந்தவர் பிரவீன்குமார், 39. பட்டு சேலை கரை போடும் தொழில் செய்கிறார். பெரியசோரகையை சேர்ந்தவர் புனிதா, 24. இவர்களுக்கு, இரு மாதங்களுக்கு முன் திருமணமானது. கடந்த, 1ல் பெரிய சோரகையில் நடந்த மாரியம்மன் பண்டிகைக்கு தம்பதியர் வந்தனர். பண்டிகை முடிந்து பிரவீன்குமார், அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். புனிதா, தந்தை வீட்டில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம், பால் வாங்கி வருவதாக கூறி சென்ற புனிதா, திரும்பி வரவில்லை. இந்நிலையில் நேற்று காலை, அருகே உள்ள கிணற்றில், புனிதா உடல் மிதந்தது. நங்கவள்ளி தீயணைப்புத்துறையினர் உடலை மீட்டனர். புனிதாவின் தந்தை அருணாசலம் புகார்படி, நங்கவள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
18-Jan-2025