உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வெள்ளை கற்கள்லாரியுடன் பறிமுதல்

வெள்ளை கற்கள்லாரியுடன் பறிமுதல்

வெள்ளை கற்கள்லாரியுடன் பறிமுதல்சங்ககிரி:சேலம் மாவட்ட கனிமவளத்துறை வருவாய் ஆய்வாளர் சேகர், சங்ககிரி - இடைப்பாடி இடையே, மஞ்சக்கல்பட்டியில் நேற்று சோதனையில் ஈடுபட்டார். அப்போது கற்கள் ஏற்றிவந்த டிப்பர் லாரியை நிறுத்த, 'சைகை' காட்டினார். உடனே டிரைவர், சற்று முன்கூட்டியே லாரியை நிறுத்திவிட்டு இறங்கி தப்பி ஓடினார். லாரியில், 2 டன் அளவில் வெள்ளை கற்கள் கடத்தி வந்தது தெரிந்தது. இதனால் அப்படியே லாரியுடன் பறிமுதல் செய்து, சங்ககிரி போலீசில் ஒப்படைத்தார். போலீசார், லாரி டிரைவரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ