கணவர் மாயம்: மனைவி புகார்
கணவர் மாயம்: மனைவி புகார்ஜலகண்டாபுரம்:-ஜலகண்டாபுரம் அருகே ஆடையூரை சேர்ந்த, கூலித்தொழிலாளி அய்யந்துரை, 49. இவரது மனைவி வளர்மதி, 38. அய்யந்துரை, சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தார். கடந்த, 14ல் வீட்டில் இருந்த அவரை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் வளர்மதி நேற்று அளித்த புகார்படி, ஜலகண்டாபுரம் போலீசார் தேடுகின்றனர்.