வரத்து அதிகரிப்புபூண்டு விலை சரிவு
வரத்து அதிகரிப்புபூண்டு விலை சரிவுசேலம்:ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் இருந்து தான், நாடு முழுதும் பூண்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. நடப்பாண்டு தொடக்கத்தில் ராஜஸ்தானில் பூண்டு அறுவடை துவங்கியதால், சேலத்துக்கு வரத்து அதிகரித்து விலை படிப்படியாக சரிந்தது. கடந்த மாதம் கிலோ, 100 முதல், 120 ரூபாய் வரை விற்றது. இந்நிலையில் மத்திய பிரதேச பூண்டு அறுவடை நடந்து வருவதால், சேலத்துக்கு மேலும் வரத்து அதிகரித்தது. இதனால் பூண்டு கிலோ, 80 முதல், 100 ரூபாயாக சரிந்துள்ளது.