தந்தை ஓட்டியபஸ் மோதிகுழந்தை பலி
தந்தை ஓட்டியபஸ் மோதிகுழந்தை பலிஆத்துார்:ஆத்துார், கீரிப்பட்டி, மேல்கணவாயை சேர்ந்தவர் ராஜவேல், 24. தனியார் பள்ளி பஸ் டிரைவர். நேற்று அவரது வீட்டில் இருந்து பஸ்சை எடுத்தார். அப்போது, அவரது ஒன்றரை வயது மகன் யோகித்ராஜ், பஸ் பின் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தான். இதை கவனிக்காமல், பஸ்சை பின்னோக்கி ஓட்டினார். அதில் பஸ் சக்கரத்தில் சிக்கிய குழந்தை, சம்பவ இடத்தில் பலியானது. மல்லியக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.