உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மின்சாரம் பாய்ந்துபைக் மெக்கானிக் பலி

மின்சாரம் பாய்ந்துபைக் மெக்கானிக் பலி

மின்சாரம் பாய்ந்துபைக் மெக்கானிக் பலிஆத்துார்:ஆத்துார், ஜோதி நகர், பெருமாள் தெருவை சேர்ந்தவர் தமிழரசன், 24. தெற்கு உடையார்பாளையத்தில், இருசக்கர வாகன பழுதுபார்ப்பு கடையில், மெக்கானிக்காக பணிபுரிந்தார். நேற்று காலை, 11:00 மணிக்கு, பழுதுபார்ப்பு கடை அருகே உள்ள வாட்டர் சர்வீஸ் கடைக்கு சென்று, இருசக்கர வாகனங்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து, சுத்தம் செய்து கொண்டிருந்தார்.அப்போது மின்சாரம் பாய்ந்ததில் துாக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்து, ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ