உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆணைவாரியில் பராமரிப்பு செவ்வாய்தோறும் விடுமுறை

ஆணைவாரியில் பராமரிப்பு செவ்வாய்தோறும் விடுமுறை

ஆத்துார், ஆத்துார் அருகே முட்டல் ஏரி மற்றும் ஆணைவாரி நீர் வீழ்ச்சி ஆகியவை, வனத்துறையின் சூழல் சுற்றுலா திட்டத்தில் செயல்படுகிறது. அங்கு ஏரி பகுதியில் பூங்கா, சிறுவர் விளையாட உபகரணங்கள் உள்ளன. சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். சமீபத்தில் பெய்த மழையால் நீர் வீழ்ச்சி பகுதியில் கைப்பிடிகள், பாதை சேதமடைந்துள்ளது. இவற்றை பராமரிக்க, வனத்துறை திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து ஆத்துார் வனச்சரகர் ரவிபெருமாள் கூறுகையில், ''மேம்பாட்டு பணி மேற்கொள்ள, செவ்வாய்தோறும் சுற்றுலா மையத்துக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை