உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மக்கள் சந்திப்பு திட்ட முகாமில்102 பேருக்கு நலத்திட்ட உதவி

மக்கள் சந்திப்பு திட்ட முகாமில்102 பேருக்கு நலத்திட்ட உதவி

மக்கள் சந்திப்பு திட்ட முகாமில்102 பேருக்கு நலத்திட்ட உதவிபெத்தநாயக்கன்பாளையம்:பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த கல்வராயன் மலை மேல்நாடு கிராமத்தில், மக்கள் சந்திப்பு திட்ட முகாம், கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் நேற்று நடந்தது.இதுகுறித்து கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது: பல்வேறு துறைகள் மூலம், 102 பயனாளிகளுக்கு, 2.23 கோடி ரூபாய் மதிப்பில் அரசு நலத்த்திட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பழங்குடி மக்களுக்கு வீட்டுமனை பட்டா, நிலத்திற்கான பட்டா வேண்டி பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர்.மலைப்பகுதியாக அமைந்துள்ளதால் பட்டா வழங்குவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இருப்பினும் நடவடிக்கை மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகம், அரசின் கவனத்துக்கு எடுத்துச்செல்லும். அரசால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை மலைவாழ் மக்கள் முழுமையாக பயன்படுத்தி, வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக, வேளாண் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். டி.ஆர்.ஓ., ரவிக்குமார், ஆத்துார் ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினி உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை