மேலும் செய்திகள்
விவசாயிகளை விரட்டிய ஒற்றை யானை: தப்பிய மூவர்
15-Dec-2024
சூளகிரி அருகே 2 ஏக்கர் கேரட் தோட்டம் நாசம்ஓசூர்,:கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே நஞ்சானெட்டி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன், 54, விவசாயி. இவர் தனக்கு சொந்தமான, 2 ஏக்கர் நிலத்தில் கேரட் சாகுபடி செய்திருந்தார். மூன்று மாதத்தில் அறுவடை செய்ய வேண்டிய கேரட், இரு மாதங்களிலேயே கருகி வீணானது. இதனால், மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் கிருஷ்ணனுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.கேரட்டை அறுவடை செய்திருந்தால், 21 லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைத்திருக்கும். அருகில் உள்ள தனியார் மெத்தை நிறுவனம் மற்றும் சிறு, குறு கிரானைட் நிறுவனத்தினர், வனப்பகுதி அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தில், பொக்லைன் வைத்து குழி தோண்டி ரசாயன நீரை ஊற்றி வருகின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, சாகுபடி செய்திருந்த கேரட் வீணானதாகவும், உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும் என, வருவாய்த்துறையிடம் கிருஷ்ணன் புகார் செய்தார். ஆனால், தாசில்தார் மோகன்தாஸ் கண்டுகொள்ளாத நிலையில், உத்தனப்பள்ளி போலீஸ் ஸ்டேஷனில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மேற்கு மாவட்ட செயலாளர் கணேஷ்ரெட்டியுடன் சென்று, நிறுவனங்கள் மீது நேற்று கிருஷ்ணன் புகார் செய்தார்.
15-Dec-2024