உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வரும் பிப்., 4 முதல் 7 வரை மக்களுடன் முதல்வர் முகாம்

வரும் பிப்., 4 முதல் 7 வரை மக்களுடன் முதல்வர் முகாம்

வரும் பிப்., 4 முதல் 7 வரை 'மக்களுடன் முதல்வர்' முகாம்சேலம்: சேலம் மாவட்டத்தில், 3ம் கட்டமாக, 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம், 90 இடங்களில், பிப்., 4ல் தொடங்கி, 7 வரை நடக்க உள்ளது. மக்கள் அதிகமாக அணுகும், 15 அரசு துறைகள் வாயிலாக, 44 வகை சேவைகளை, இந்த முகாமில் பெறலாம். இதில் மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைவரிடமும் கோரிக்கை மனுக்களை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சேவை விபரங்கள், மக்கள் பார்வைக்கு தெரியும்படி, முகாமில் அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும். மனு அளிக்க வரும் மக்களுக்கு வரிசைப்படி, 'டோக்கன்' வழங்கி, உதவி மையத்தை அணுகி பயன்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் முகாம் நடக்கும் பகுதி, நாட்களை அறித்து, சேவைகளை பெற, அரசு செயல்படுத்தும் இத்திட்டத்தை, மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை