உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வீட்டின் கதவை உடைத்து 6 பவுன், ரூ.2 லட்சம் திருட்டு

வீட்டின் கதவை உடைத்து 6 பவுன், ரூ.2 லட்சம் திருட்டு

வீரபாண்டி: சேலம் மாவட்டம் பெரிய சீரகாபாடி, சடையாண்டி ஊத்தை சேர்ந்த விவசாயி கந்தசாமி, 65. இவர் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு அருகே உள்ள உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்-சிக்கு, வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்றார். இரவு, 9:30 மணிக்கு திரும்பி வந்த போது கதவு உடைக்கப்பட்டிருந்-தது. அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த, 5 பவுன் சங்கிலி, அரை பவுனில் இரு தோடுகள், 2 லட்சம் ரூபாய் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து கந்தசாமி புகார்படி ஆட்டையாம்பட்டி போலீசார், சம்பவ இடத்தில் விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள், தடயங்களை சேகரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை