உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு பள்ளிகளில் மேலாண் குழு தேர்வு

அரசு பள்ளிகளில் மேலாண் குழு தேர்வு

வீரபாண்டி: பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், 2020 முதல், பள்ளி மேலாண் குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அக்குழுவில் தலைவர், துணை தலைவர், தலைமையாசிரியர், ஆசிரிய பிரதிநிதி, மாணவர்களின் பெற்றோர், முன்னாள் மாண-வர்களின் பெற்றோர் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்-னார்வலர், முன்னாள் மாணவர் உள்பட, 24 உறுப்பினர்கள் இருப்பர். இவர்களில், 75 சதவீதம், மாணவர்களின் பெற்றோராக இருக்க வேண்டும்.அவர்களில், 50 சதவீத பெண்கள் இடம்பெற வேண்டும். அனைத்து சமுதாயத்தினரின் பங்களிப்பு இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுதும் அரசு பள்-ளிகளில் பள்ளி மேலாண் குழு அறிமுக கூட்டம் கடந்த, 2ல் நடந்தது. நேற்று குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டனர். சேலம் மாவட்டம் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி மேலாண் குழு தலைவியாக பத்மா, துணை தலைவியாக தேவகி, தலை-மையாசிரியர் இளங்கோவன் உள்ளிட்ட புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இக்குழு மாதந்தோறும் கூடி பள்ளி வளர்ச்சி, மாணவர்களின் தேவை, பாதுகாப்பு வசதி குறித்து ஆலோசித்து பரிந்துரை செய்யும். அடுத்த இரு ஆண்டுகளுக்கு புது உறுப்பினர்கள் பதவியில் இருப்பர். அதேபோல் ஆட்டை-யாம்பட்டி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில், மேலாண் குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை