மேலும் செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம்
15-Aug-2024
இடைப்பாடி: தமிழ்நாடு கியோகுஷின் கராத்தே சங்கம், இடைப்பாடி ரோட்டரி சங்கம், அப்துல் கலாம் அறக்கட்டளை இணைந்து, ஆரோக்கிய வாழ்வு விழிப்புணர்வு ஊர்வலத்தை நேற்று நடத்தின. தமிழக தலைமை பயிற்சியாளர் சின்னுசாமி தலைமை வகித்தார். கராத்தே சங்க மாநில தலைவர் சீனிவாசன், இடைப்பாடி நக-ராட்சி கவுன்சிலர் முருகன் தொடங்கி வைத்தனர். இடைப்பாடி பஸ் ஸ்டாண்டில் தொடங்கிய ஊர்வலம், நைனாம்பட்டி, காந்தி நகர், வெள்ளாணடிவலசு, கேட்டுக்கடை வழியே சென்று முடிந்-தது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.
15-Aug-2024