உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புகையிலை விற்பனை 2 கடைகளுக்கு பூட்டு

புகையிலை விற்பனை 2 கடைகளுக்கு பூட்டு

ஆத்துார்: ஆத்துார், உடையார்பாளையம், தென்னங்குடிபாளையத்தில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் கண்ணன், ராஜா, ரமேஷ் ஆகியோர் இரு நாட்களுக்கு முன் ஆய்வு செய்தனர். அப்போது உடையார்பாளையம் ஜெயவேல், தென்னங்குடிபா-ளையம் வெண்ணிலா கடைகளில் புகையிலை பொருட்கள் விற்-றது தெரிந்தது. இதனால் நேற்று முன்தினம், 'நோட்டீஸ்' வழங்கி, கடைக்கு பூட்டு போட்டனர். வழக்கு முடிந்த பின் கடையை திறக்க அறிவு-றுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !