உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மருத்துவ கல்லுாரி மாணவி லாரி மோதி பரிதாப பலி

மருத்துவ கல்லுாரி மாணவி லாரி மோதி பரிதாப பலி

சேலம்: கரூர் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ கல்லுாரி மாணவி, சேலத்தில் நடந்த சாலை விபத்தில் பலியானார்.கரூர் மாவட்டம், கணபதி பாளையம் காமராஜர் நகரை சேர்ந்தவர் சரவணகுமார் மகள் மித்ரா, 23. சேலம் அரியானுார் பகுதியில் உள்ள, தனியார் மருத்துவக் கல்லுாரியில் உள்ள வளாகத்தில் தங்கி இறுதியாண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று கல்-லுாரி வளாகத்தில் இருந்து சுசுகி அசஸ் மொபட்டில் சென்ற மாணவி, சேலத்தில் உள்ள நண்பரை பார்த்து விட்டு, மீண்டும் கல்லுாரிக்கு மாலை, 3:45 மணிக்கு திரும்பி கொண்டிருந்தார். கந்-தம்பட்டி ரயில்வே மேம்பாலத்தை தாண்டியபோது, ஒருவர் சாலையில் குறுக்கே வந்ததாக தெரிகிறது. இதனால் நிலை தடுமா-றிய நிலையில், பின்னால் குடிநீர் ஏற்றி வந்த லாரி மோதியது. இதில் தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே மாணவி மித்ரா பலி-யானார்.சூரமங்கலம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசா-ரித்து வருகின்றனர்.இருளில் தவித்த மலைவாழ் மக்களுக்கு ஒளி கொடுத்த மின்சார வாரியம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி