மருத்துவமனையில்பெண் மாயம்
மருத்துவமனையில்பெண் மாயம்ஆத்துார்:வாழப்பாடி அருகே நாட்டார்மங்கலத்தை சேர்ந்த, பொன்ராஜ் மனைவி திவ்யா, 31. இவர்களுக்கு இரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், திவ்யா, கடந்த பிப்ரவரி முதல், தலைவாசல், மணிவிழுந்தான் காலனியில் உள்ள அவரது சித்தி சீதா, 40, வீட்டில் தங்கி இருந்தார். சித்தி மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால், ஆத்துார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் திவ்யா இருந்து வந்தார். ஆனால் நேற்று, மருத்துவமனையில் இருந்த திவ்யா மாயமாகியுள்ளார். இதுகுறித்து சீதா புகாரில், ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.