உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / எஸ்.கே.எஸ்., மருத்துவமனையில்துாக்கக்கோளாறுகளுக்கு சிகிச்சை

எஸ்.கே.எஸ்., மருத்துவமனையில்துாக்கக்கோளாறுகளுக்கு சிகிச்சை

எஸ்.கே.எஸ்., மருத்துவமனையில்துாக்கக்கோளாறுகளுக்கு சிகிச்சைசேலம்:உலக துாக்க தினத்தை ஒட்டி, சேலம், புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள எஸ்.கே.எஸ்., மருத்துவமனையில் உள்ள துயில் துாக்க மையம் சார்பில், துாக்கத்தின் முக்கியத்துவம் குறித்து, மக்களுக்கு அறிவுறுத்தும் நிகழ்ச்சி நடந்தது.இதுகுறித்து, மருத்துவமனையின் துயில் துாக்க மைய சிறப்பு மருத்துவர் ராஜகோபால் கூறியதாவது:இந்த ஆண்டு, உலக துாக்க தின கருப்பொருள், துாக்கம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்குள் உள்ள முக்கிய தொடர்பை அடிக்கோடிட்டு, 'துாக்க ஆரோக்கியத்தை முன்னுரிமையாக்குங்கள்' என்கிறது.துாக்கம் மனித வாழ்வின், 3ல் ஒரு பங்கை ஆக்கிரமிக்கிறது. ஒவ்வொருவரும் தினமும், 7:00 முதல், 9:00 மணி நேரம் துாங்க வேண்டும். துாக்க குறைபாடு, நீண்ட கால உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தும். சேலத்தில், முதல் விரிவான துாக்கக்கோளாறு சிகிச்சை மையமான, எஸ்.கே.எஸ்., மருத்துவமனையின் துயில் மையம், துாக்க கோளாறுகளுக்கு சிறப்பு பரிசோதனை, சிகிச்சைகளை வழங்குகிறது. துாக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, துாக்கப்பழக்கங்களை மேம்படுத்த, அனைத்து மக்களும் முன் முயற்சி எடுக்க வேண்டும். நல்ல துாக்கம், நல்ல வாழ்க்கைக்கு அடித்தளம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ