மேலும் செய்திகள்
பாரதிய மஸ்துார் சங்கம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
19-Mar-2025
பாரதிய மஸ்துார் சங்கம்ஆர்ப்பாட்டம் சேலம்:சேலம், கோட்டை மைதானத்தில், மாவட்ட பாரதிய மஸ்துார் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர் பழனிசாமி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலர் சந்தானகிருஷ்ணன் பங்கேற்றார்.அதில் தொழிலாளர் சம்பளத்தில் வருங்கால வைப்பு நிதிக்கு பிடித்தம் செய்வதற்கான ஊதிய உச்சவரம்பு, 15,000ல் இருந்து, 30,000 ரூபாயாக உயர்த்தல்; பொது சொத்துகளை விற்று பணமாக்குவதை உடனே நிறுத்தல், குறைந்தபட்ச ஓய்வூதியம், 5,000 ரூபாய் வழங்குதல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். அமைப்பு செயலர் ஆனந்தராவ், மாவட்ட துணைத்தலைவர் வசந்தி, பொருளாளர் நாகலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
19-Mar-2025