மாணவிக்கு தொந்தரவுஹெச்.எம்., டிஸ்மிஸ்
மாணவிக்கு தொந்தரவுஹெச்.எம்., 'டிஸ்மிஸ்'மேட்டூர்:கொளத்துார், கருங்கல்லுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ராஜா, 52. இவர், 2023 ஆக., 10ல், அப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்தார். ஊர்மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.பள்ளி கல்வித்துறை, அவரை, 'சஸ்பெண்ட்' செய்தது. பெற்றோரிடம் நடந்த விசாரணைக்கு பின், தாரமங்கலம் மாவட்ட கல்வி அலுவலர் ராஜூ, அதன் விசாரணை அறிக்கையை, அரசுக்கு அனுப்பினார். அதன்படி, தாரமங்கலம் மாவட்ட கல்வி அலுவலர் ராஜூ, நேற்று தலைமை ஆசிரியர் ராஜாவை, 'டிஸ்மிஸ்' செய்தார்.