எல்லைப்பிடாரி அம்மனுக்கு18ல் பூச்சாட்டுதல் விழா
எல்லைப்பிடாரி அம்மனுக்கு18ல் பூச்சாட்டுதல் விழாசேலம்:சேலம், குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரி அம்மன் திருவிழா வரும், 18ல் பூச்சாட்டுதல், கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்க உள்ளது. தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடக்கும். 25 காலை மாவிளக்கு ஊர்வலத்துடன் சக்தி அழைத்தல்; 26ல் அலகு குத்துதல், பொங்கல் வைத்தல், புஷ்ப பல்லக்கில் அம்மன் ஊர்வலம், பூங்கரகம் எடுத்தல்; 27 காலை திருக்கல்யாணம், மதியம் பூ மிதி விழா, இரவு அம்மன் திருவீதி உலா; 28 காலை பால்குட ஊர்வலம், 108 லிட்டர் பால் அபி ேஷகம்; 29ல் சத்தாபரணம் நடக்க உள்ளதால், பக்தர்கள் பங்கேற்க, விழா குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.