உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறுமிகளிடம் அத்துமீறல் போக்சோவில் 2 பேர் கைது

சிறுமிகளிடம் அத்துமீறல் போக்சோவில் 2 பேர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி, ஊமாரெட்டியூரை சேர்ந்தவர் மாதவன், 40; கூலி தொழிலாளி. பவானி பகுதியில் சாலையில் விளையாடிய ஆறு வயது சிறுமியிடம், பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதைப்பார்த்த சிறுமி யின் பெற்றோர், மாத-வனை பிடித்து பவானி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். விசாரணையில் சில்மிஷத்தில் ஈடுபட்டதை உறுதி செய்த போலீசார், போக்சோ வழக்கில் மாதவனை கைது செய்தனர்.* பவானிசாகரை அடுத்த தொட்டம்பாளையத்தை சேர்ந்த கட்-டட தொழிலாளி வெள்ளியங்கிரி, 55; அதே பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்றபோது, அங்கு விளையாடி கொண்டி-ருந்த எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்-துள்ளார்.புகாரின்படி பவானிசாகர் போலீசார் விசாரித்தனர். அப்பகுதி 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து சம்பவத்தை உறுதி செய்தனர். போக்சோ சட்டத்தில் வெள்ளியங்கிரியை கைது செய்து, சத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சத்தி கிளை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை