உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வரும் 23ல் பத்ரகாளியம்மன் கோவில்கும்பாபிேஷக 12ம் ஆண்டு நிறைவு விழா

வரும் 23ல் பத்ரகாளியம்மன் கோவில்கும்பாபிேஷக 12ம் ஆண்டு நிறைவு விழா

மேட்டூர், : மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிேஷகம், 2013 ஜன., 23ல் நடந்தது. அதன், 12ம் ஆண்டு கும்பாபிேஷக நிறைவு விழா, வரும், 23ல் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் குடும்பத்தினர், சிவம் குரூப் ஆப் கம்பெனி சார்பில், அக்கோவிலில் புஷ்ப அலங்காரம் நடக்க உள்ளது. அன்று காலை, 7:30 மணிக்கு கணபதி ேஹாமம், அஷ்டலட்சுமி ேஹாமம், 108 சங்காபிேஷகம்; 11:00 மணிக்கு, மேச்சேரி, சாம்ராஜ்பேட்டை ஆதிபராசக்தி மன்றத்தில் இருந்து பால்குட ஊர்வலம் புறப் படுதல்; 11:30 மணிக்கு அம்மனுக்கு பாலாபிேஷகம்; மதியம், 1:30 மணிக்கு அன்னதானம், மாலையில் சுவாமி வீதி உலா; இரவு, 7:00 மணிக்கு, மதுரை நாட்டியாலயா கலைக்கூடம் சார்பில் பரதநாட்டியம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, பத்ரகாளியம்மன் கோவில் நிர்வாகம், பத்ரகாளியம்மன் இறையருள் நற்பணி மன்றத்தினர் மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை