சோனா தொழில்நுட்ப கல்லுாரியில்28ம் ஆண்டு விழா கொண்டாட்டம்
சோனா தொழில்நுட்ப கல்லுாரியில்28ம் ஆண்டு விழா கொண்டாட்டம்சேலம்:சேலம் சோனா தொழில்நுட்ப கல்லுாரியில், 28ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அதன் தலைவர் வள்ளியப்பா தலைமை வகித்து தொடங்கி வைத்தார். துணை தலைவர்கள் சொக்கு, தியாகு முன்னிலை வகித்தனர். முதல்வர் செந்தில்குமார், ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். அதில் கல்லுாரியின் துறைசார்ந்த நடவடிக்கைகள், பேராசிரியர்களின் பங்களிப்பு, மாணவ, மாணவியரின் ஆராய்ச்சிகள் குறித்த தகவல்கள் இருந்தன. சென்னை ஜி.இ வெர்னோவா நிறுவனத்தின் இந்திய மனித வள தலைவர் பிரபு, ஹூண்டாய் மோட்டர்ஸ் நிறுவன மேலாளர் தரணிஜெயபால் பேசினர்.பல்வேறு பிரிவுகளில் சிறப்பிடம் பிடித்தவர்கள், சிறந்து விளங்கிய கல்லுாரி மாணவ, மாணவியர்களுக்கு, துறை வாரியாக பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. எம்.பி.ஏ., துறைத்தலைவர் அஞ்சனி நன்றி தெரிவித்தார்.சோனா கல்வி நிறுவன இயக்குனர் கார்த்திகேயன், முதல்வர்கள் கனகராஜ், காதர்நவாஷ், கவிதா, பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.