பம்ப் ஆப்ரேட்டர்மனைவியிடம்ரூ.3 லட்சம் வழங்கல்
'பம்ப் ஆப்ரேட்டர்'மனைவியிடம்ரூ.3 லட்சம் வழங்கல்மேட்டூர்:மேச்சேரி, வெள்ளாறு ஊராட்சி அரசமரத்துாரை சேர்ந்தவர் சுப்ரமணியன், 55. இவர், 10 ஆண்டுக்கு மேலாக வெள்ளாறு ஊராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் டேங்க் ஆப்ரேட்டராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் எருமப்பட்டியில் தொட்டியில் ஏறி வேலை செய்தபோது, மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் அவரது மனைவி மல்லிகாவிடம், தமிழக அரசு நிவாரண நிதி, 3 லட்சம் ரூபாய் காசோலையை, மேட்டூர் ஆர்.டி.ஓ., லோகநாயகி(பொ), மேட்டூர் தாசில்தார் ரமேஷ், நேற்று வழங்கினர்.