உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோடாரியால் வெட்டியவழக்கில் 4 பேர் கைது

கோடாரியால் வெட்டியவழக்கில் 4 பேர் கைது

கோடாரியால் வெட்டியவழக்கில் 4 பேர் கைதுஇடைப்பாடி:கொங்கணாபுரம் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 50, விவசாயி. இவருக்கும், அவரது அண்ணன்கள் அம்மாசி, அய்யனார் குடும்பத்தினருக்கும் வழித்தடம் சம்பந்தமாக, ஆறு ஆண்டுகளாக தகராறு உள்ளது.கடந்த, 28ல் பழனிசாமி, அவரது மனைவி ஈஸ்வரி ஆகியோர் வீட்டின் முன்புறம் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அம்மாசி மகன் வெள்ளிவேல், அய்யனார், இவரது மகன் பழனிசாமி ஆகியோர் தகராறில் ஈடுபட்டு, தாங்கள் கொண்டு வந்த கோடாரியால் வெட்ட வந்தனர். தடுக்க வந்த பழனிசாமியின் கையில் காயம் ஏற்பட்டது. அங்கு நிறுத்தப்பட்டு இருந்த, இரு பைக்குகளை சேதப்படுத்தினர். இந்நிலையில், பதிலுக்கு அவர்கள் திருப்பி தாக்கியதில் பழனிசாமி, 37, காயமடைந்தார்.இதில் பழனிசாமி, 50, கொடுத்த புகார்படி வெள்ளிவேல், அம்மாசி, அய்யனார், அவரது மகன் பழனிசாமி ஆகிய நான்கு பேர் மீதும், மற்றொரு பழனிசாமி, 37, கொடுத்த புகார்படி பழனிசாமி, அவரது மனைவி ஈஸ்வரி, மகன் சிவனவேல் ஆகிய மூவர் மீதும், கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில் அம்மாசி, அய்யனார், ஈஸ்வரி, சிவனவேல் ஆகிய நான்கு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை