உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வெ.கரட்டூரில் 3 கோழிகளை கவ்விச்சென்ற சிறுத்தை

வெ.கரட்டூரில் 3 கோழிகளை கவ்விச்சென்ற சிறுத்தை

வெ.கரட்டூரில் 3 கோழிகளைகவ்விச்சென்ற சிறுத்தைமேட்டூர், செப். 14-கொளத்துார், தின்னப்பட்டி ஊராட்சி வெள்ளக்கரட்டூரில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக, விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் சேலம் உதவி வனபாதுகாவலர் செல்வகுமார் தலைமையில் வனத்துறையினர், அப்பகுதியில் இரு கூண்டுகளை வைத்து இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, அப்பகுதியில் உள்ள விவசாயி பெருமாள் நிலத்தில் புகுந்த சிறுத்தை, 3 கோழிகளை கவ்விச்சென்றது. இதனால் சிறுத்தையை பிடிக்க மேட்டூர் வனத்துறையினர், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.சூரியமலையில் மர்ம விலங்குதேவூர் அருகே சூரியமலை அடுத்த கரட்டுப்பாளையத்தில் கண்ணன், 43, என்பவர் விவசாயம் செய்துகொண்டு அப்பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார். அவரது தோட்டம் மலை வனப்பகுதி ஒட்டியுள்ளது. அவர் வளர்த்து வரும், 2 ஆடுகளை மர்ம விலங்கு கடித்ததால் நேற்று முன்தினம் இரவு இறந்துகிடந்தன. அதேபோல் கோபாலனுார், மொத்தையனுார் பகுதிகளில், ஆடு, நாய்களை மர்ம விலங்குகள் கொன்று வருவதாக, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இதனால் விவசாய மக்கள் அச்சம் அடைந்துள்ளதால், வனத்துறையினர், வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி