உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / எம்.எல்.ஏ., இல்ல திருமணம் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து

எம்.எல்.ஏ., இல்ல திருமணம் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து

சேலம்: சேலத்தில், பா.ம.க., கவுரவ தலைவரான, எம்.எல்.ஏ., மணியின் மைத்துனர் தனராஜ், சாரதா தம்பதியின் மகன் சேதுநாயக், மயிலா-டுதுறையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, விஜயலட்சுமியின் மகள் விமலாம்பிகை திருமணம் நேற்று நடந்தது. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்து பேசியதா-வது:தமிழ் குமரன், 'டான்' எனும் படத்தை எடுத்தார். அதில் பெற்றோர் உயிரோடு இருக்கும்போது, புகழுடன் உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள் எனும் அருமையான கருத்தை கூறி படத்தை முடித்திருப்பார். மணமக்கள் வாழ்க.இவ்வாறு அவர் பேசினார்.பா.ம.க., தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.அதேபோல் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கயல்விழி, ராஜேந்-திரன், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், செம்மலை, அன்பழகன், புதுச்-சேரி அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், திரை நட்சத்திரங்கள், சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, தர்மபுரி கலெக்டர் சதீஷ் உள்ளிட்டோர், மணமக்களை வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை