உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தான்தோன்றீஸ்வரர் கோவிலில் 4 கால் மண்டபம் கட்ட பூஜை

தான்தோன்றீஸ்வரர் கோவிலில் 4 கால் மண்டபம் கட்ட பூஜை

வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த பேளூரில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தான்தோன்றீஸ்வரர் கோவில் முகப்பில், 4 கால் மண்டபம் இருந்தது. 5 ஆண்டுக்கு முன் லாரி மோதியதில் மண்டபம் சேதமடைந்தது. இதனால் கோவையில் உள்ள தனியார் நிறுவனம் மூலம், 14.80 லட்சம் ரூபாய் மதிப்பில், 4 கால் மண்டபம் அமைக்க பூமி பூஜை விழா நேற்று நடந்தது. பா.ஜ.,வின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமை வகித்து பணியை தொடங்கி வைத்தார். தனியார் நிறுவன இயக்குனர் ஸ்ரீதர், மேலாளர் சிவக்குமார், பா.ஜ.,வின் சேலம் கிழக்கு மாவட்ட பொது செயலர்கள் ராமச்சந்திரன், ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை