உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பைக் மீது டிராக்டர் மோதல் மனைவி கண்முன் கணவர் பலி

பைக் மீது டிராக்டர் மோதல் மனைவி கண்முன் கணவர் பலி

பைக் மீது டிராக்டர் மோதல்மனைவி கண்முன் கணவர் பலிஇடைப்பாடி, நவ. 9-மகுடஞ்சாவடி, குட்டிமணி நகரை சேர்ந்தவர் பாக்கியராமன், 32. அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள, தனியார் காலணி நிறுவனத்தில் பணிபுரிந்தார். இவரது மனைவி உஷா, 29. திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லுாரியில் கணினி ஆப்பரேட்டராக பணிபுரிகிறார். இருவரும் நேற்று, ஜலகண்டாபுரத்தில் உள்ள உறவினர் திருமணத்துக்கு சென்றுவிட்டு, டி.வி.எஸ்., விக்டர் பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டனர். மதியம், 12:00 மணிக்கு இடைப்பாடி அருகே மல்லிபாளையத்தில் சென்றபோது, செங்கல் லோடு ஏற்றிச்சென்ற டிராக்டர், பைக் மீது மோதியது. இதில் மனைவி கண்முன்னே பாக்கியராமன் பலியானார். உஷா படுகாயம் அடைந்து இடைப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இடைப்பாடி போலீசார், தப்பிய டிராக்டர் டிரைவரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை