மேலும் செய்திகள்
மாவட்டத்தில் 13 போலீஸ் எஸ்.ஐ., க்கள் இடமாற்றம்
10-Aug-2024
பனமரத்துப்பட்டி: சேலம் ஊரகம், மல்லுார் மகளிர் போலீஸ் ஸ்டேஷன், கொண்ட-லாம்பட்டியில் உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள் தொடர்பான புகார் அளிக்க, மல்லுார், பனமரத்துப்பட்டி பகுதிகளில் இருப்போர், கொண்ட-லாம்பட்டி செல்ல வேண்டியுள்ளது. இதனால் போலீஸ் ஸ்டேஷனை, மல்லுாருக்கு இடமாற்ற, அங்குள்ள பழைய போலீஸ் ஸ்டேஷன் இடத்தில் கட்டடம் கட்டும்படி, அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.அதுவரை, மகளிர் ஸ்டேஷனை, மல்லுாரில் தனியார் வாடகை கட்டடத்துக்கு இடமாற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.நேற்று, சேலம் ஊரக டி.எஸ்.பி., தேன்மொழிவேல், மல்லுாரில் உள்ள தனியார் கட்டடங்களை பார்வையிட்டார். இதனால் விரைவில் மகளிர் ஸ்டேஷன், மல்லுார் வந்து விடும் என, போலீசார் தெரிவித்தனர்.
10-Aug-2024